தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா


தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா
x

இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில், தசரா பெருந்திருவிழா 5-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் ஶ்ரீநவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story