செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,219 பேர் பாதிப்பு; தொற்றின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,219 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். தொற்றின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,219 பேர் பாதிப்பு; தொற்றின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது
Published on

1,219 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 483 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 182 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 370 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 443 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 218 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 786 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 521 உயர்ந்துள்ளது. 2,911 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com