ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி- கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று
ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலியானார். கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலியானார். கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகாரிக்கு கொரோனா
பவானியை சேர்ந்தவர் வி.லோகநாதன் (வயது 59). இவர் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். லோகநாதன் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு் வந்தார்.
தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சுகாதார பணியாளர்களுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி பரிசோதனை எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
தொற்றுக்கு பலி
இதையடுத்து அவர் கடந்த மாதம் 25-ந் தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தனிமைப்படுத்தி டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து 3 நாட்கள் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மேலும் அதிகாரியுடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வி.லோகநாதன் நேற்று மாலை இறந்தார்.
கொடுமுடி
கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கொடுமுடி அருகே உள்ள அரசம்பாளையத்தை சேர்ந்த 57 வயது ஆணுக்கும், கொல்லம்புதுப்பாளையத்தை சேர்ந்த 37 வயது ஆணுக்கும், வெங்கம்பூரைச் சேர்ந்த 37 வயது ஆணுக்கும், கம்மங்காட்டுக்களத்தைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கும், சின்னக்கண்டணூரைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கும், தாமரைப்பாளையத்தை சேர்ந்த 3 பேருக்கும், 15 வயது பெண்ணுக்கும், நகப்பாளையத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கும், 72 வயது முதியவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
23 பேருக்கு தொற்று
இதேபோல் கொடுமுடி வடக்குத் தெருவைச் சேர்ந்த 3 பெண்களுக்கும், 23 வயது ஆணுக்கும், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும், சாலைப்புதூரைச் சேர்ந்த 26 வயது ஆணுக்கும், 44 வயது பெண்ணுக்கும், ரோஜா நகரைச் சேர்ந்த 37 வயது பெண்ணுக்கும், கொடுமுடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும், கொடுமுடி பழைய பஸ் நிலையத்தை சேர்ந்த 57, 29 வயது ஆண்களுக்கும் மற்றும் 41 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
கொடுமுடி பகுதியில் ஒரே நாளில் மொத்தம் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு்ள்ளார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story