பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 1:06 AM IST (Updated: 18 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை:

பாட்டாளி மக்கள் கட்சி தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் செங்கோட்டையில், மதுக்கடைகளை கொரோனா காலத்தில் அரசு திறந்து வைத்து இருப்பதை கண்டித்தும், அதை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத்தலைவர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் பாண்டியன், மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் சுப்பையா பாண்டியன், தேன்ராஜ், முருகேஸ்வரி, பால முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலபுரம் பகுதியில் மாவட்ட துணைத்தலைவர் பல்தேவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தத. திருவேங்கடத்தில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையிலும்,  சங்கரன்கோவில் நகரத்தில் நகர தலைவர் கருப்பசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

காசிதர்மம் கிராமத்தில் பா.ம.க. நிர்வாகிகள் வீட்டு வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி யாதவ், கிளைச்செயலாளர் சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story