மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, குரும்பிவயல் ஆகிய பகுதிகளில் காட்டாற்றில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி குவித்து வைத்து மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு சென்று பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காட்டாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து கறம்பக்குடி போலீசில் ஒப்படைத்தார். கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story