ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 25 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 25 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள கரு வடதெரு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடியில் நேற்று முன்தினம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் ஏலஅறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்தநிலையில் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி உள்பட 25 விவசாயிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story