வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ விபத்து
வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டது
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து செல்வம், விவசாயி. இவர் தனது வயலில் இருந்து டிராக்டரில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின்வயர் வைக்கோல் மீது உரசியதில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தை ராசு தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து வைக்கோலில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வைக்கோல் எரிந்து நாசமானது.

Related Tags :
Next Story