சிவன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
கீரனூர் அருகே சிவன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் பழமையான காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சிலையை தவிர பரிவார தெய்வங்களான விநாயகர் முருகன் கிருஷ்ணர் போன்ற சன்னதிகள் மற்றும் நந்தி சிலையும் உள்ளன. இந்த கோவிலுக்கு 2 அர்ச்சகர்கள் சொந்தம் கொண்டாடி வருவதால் கோவில் சரிவர பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து திறந்தே கிடக்கிறது.இந்தநிலையில் திறந்து கிடந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள நந்தி சிலையின் தலையை உடைத்துள்ளனர். மேலும் பரிவார தெய்வங்களின் சிலைகளையும் உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து திருச்சியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story