மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி குறைந்தது
x
தினத்தந்தி 18 Jun 2021 3:46 AM IST (Updated: 18 Jun 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி குறைந்தது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது. அன்று காலை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. 12-ந் தேதி காலை வினாடிக்கு 1,170 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அதன்பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 396 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட தண்ணீர் திறப்பு அதிக அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 93.55 அடியாக குறைந்தது. இதன் மூலம் கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.


Next Story