சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கு கொரோனா- 15 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கு கொரோனா- 15 பேர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2021 3:59 AM IST (Updated: 18 Jun 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 598 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 598 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
598 பேருக்கு தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 693 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று புதிதாக 598 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 125 பேர், வீரபாண்டியில் 46 பேர், எடப்பாடியில் 35 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 22 பேர், கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடியில் தலா 16 பேர், ஓமலூர் மற்றும் கெங்கவல்லியில் தலா 17 பேர், சங்ககிரி, தலைவாசல் மற்றும் தாரமங்கலத்தில் தலா 19 பேர் மற்றும் சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் உள்பட மொத்தம் 598 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
டிஸ்சார்ஜ்
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தற்காலிக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,970 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம் 5 ஆயிரத்து 633 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது.

Next Story