புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
Published on

தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து சரக்கு

விமானத்தில் 13 பெட்டிகளில் 60 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. அவை தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.அதேபோல் புனேவில் இருந்து விமானத்தில் 9 பெட்டிகளில் தமிழக அரசு கொள்முதல் செய்த 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், மத்திய தொகுப்பில் இருந்து 23 பெட்டிகளில் 2 லட்சத்து 76 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன.

விமான நிலையத்தில் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கும், மத்திய தொகுப்பில் இருந்து வந்த தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com