வேதாரண்யத்தில் சணல் பயிர் அறுவடை பணி தீவிரம்


வேதாரண்யத்தில் சணல் பயிர் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Jun 2021 4:03 PM IST (Updated: 18 Jun 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் சணல் பயிர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, ஆதனூர், கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா அறுவடை முடிந்த உடன் வயலில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு சணல் பயிர் விதைக்கப்பட்டு 3 மாதத்தில் அறுவடை செய்யப்படும். சணல் பயிர் இயற்கை பசுந்தாள் உரமாக வயல்களில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது சணல் பயிர் காய்த்து முற்றிய நிலையில் உள்ளதால் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணி எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் எந்திரம் மூலம் சணல் விதைகள் எடுக்கப்பட்டு, சணல் செடிகளை வயலில் மறு உழவு செய்து பசுந்தாள் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

சணல் பயிருக்கு அதிக செலவு இல்லாமலும், இயற்கை பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கரில் 25 கிலோ சணல் விதை தெளித்துசாகுபடி செய்தால் 250 கிலோ சணல் விதை கிடைக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஒரு கிலோ சணல் விதை ரூ. 60-க்கு கொள்முதல் செய்கின்றனர். தண்ணீர், உரம் இன்றி நன்றாக சணல் பயிர் விளைவதால் விவசாயிகளுக்கு அதிக லாபத்தையும், மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story