வேதாரண்யம் தாலுகாவில் நாளை முதல் சுழற்சி முறையில் மின் தடை


வேதாரண்யம் தாலுகாவில் நாளை முதல் சுழற்சி முறையில் மின் தடை
x
தினத்தந்தி 18 Jun 2021 11:21 AM GMT (Updated: 18 Jun 2021 11:21 AM GMT)

வேதாரண்யம் தாலுகாவில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை செயற்பொறியாளர் நக்கீரன், வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் வேதாரண்யம் நகர் மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு நாளையும் (சனிக்கிழமை), தோப்புத்துறை மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு 21-ந்தேதியும் (திங்கட்கிழமை), தேத்தாகுடி மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு 22-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை), மறைஞாயநல்லூர் பகுதிகளுக்கு 23-ந்தேதியும் (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இதே போல் ஆயக்காரன்புலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ஆயக்காரன்புலம் பகுதிகளுக்கு 25, 26-ந் தேதிகளிலும், கருப்பம்புலம் பகுதிகளுக்கு 24-ந்தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம்பெறும் நாலுவேதபதி மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) மற்றும் 21, 23-ந்தேதிகளிலும், திருப்பூண்டி மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு 22-ந்தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

வாய்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மின்பாதையான ஆலங்குடி பகுதிகளுக்கு 21, 22-ந் தேதிகளிலும், மருதூர் மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு 23, 24-ந் தேதிகளிலும், கரியாப்பட்டினம் பகுதிகளுக்கு நாளை மற்றும் 24 -ந்தேதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story