தடுப்பூசி செலுத்தாததால் பொதுமக்கள் ஏமாற்றம்


தடுப்பூசி செலுத்தாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:10 PM IST (Updated: 18 Jun 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி செலுத்தாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

கோவை

கோவை மாநகராட்சி மையங்களில் நேற்று தடுப்பூசி செலுத்தாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி மையங்கள்

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் 39 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

அங்கு போதிய எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. எனவே நேற்றும் தடுப்பூசி போடப்படும் என்று அந்தந்த மையங்களுக்கு பொதுமக்கள் வந்தனர்.

குனியமுத்தூரில் வாக்குவாதம்

இது போல் குனியமுத்தூர் மாநகராட்சி பள்ளி முன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த னர். 

ஆனால் 9 மணிக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், இது பற்றி ஏன் முதலிலேயே அறிவிக்க வில்லை.

 இவ்வளவு நேரம் வரிசையில் காத்திருக்க வைத்து விட்டு இப்போது தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறுவது ஏன் என்று அங்கிருந்த ஊழியர்களி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. உடனே அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

முன்கூட்டியே அறிவிக்கப்படும்

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது

மாவட்ட சுகாதார துறை சார்பில் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. எங்களுக்கு தடுப்பூசி கிடைத்ததும் தாமதிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்துகிறோம். இருப்பு இல்லாத தால் தான் இன்று (நேற்று) தடுப்பூசி போடப்பட வில்லை.  

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடப்ப டுமா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தேவையின்றி காத்திருப்பது தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story