67 போலீசார் இடமாற்றம்


67 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:13 PM IST (Updated: 18 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 67 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம், ஜூன்.19-
விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கலியமூர்த்தி அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்கும், மயிலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏட்டுகள் சிவக்குமார் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்திற்கும், உமாசங்கர் காணைக்கும், மகேந்திரன் விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், கண்டமங்கலம் ஏட்டு வேல்முருகன் மயிலத்திற்கும், கோட்டக்குப்பம் ஏட்டு ஆரோக்கியநாதன்பிரான்சிஸ் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், வானூர் ஏட்டு ராஜா பெரியதச்சூருக்கும், செஞ்சி ஏட்டு சக்திமுருகன் கஞ்சனூருக்கும், திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு விஜயா கெடாருக்கும், செஞ்சி மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவுக்கரசி அனந்தபுரத்திற்கும், திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு பரிதா செஞ்சி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மற்றும் 55 போலீசார்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Next Story