பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை இ சேவை மையங்களில் வழங்க அறிவுறுத்தல்


பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை இ சேவை மையங்களில் வழங்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:21 PM IST (Updated: 18 Jun 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையங்களில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவாடானை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு 1430 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்கு முடிக்கும் பணிகள் வருகிற 21-ந் தேதி முதல் தொடங்குகிறது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி தலைமையில் தினமும் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. 21 -ந் தேதி மங்கலக்குடி பிர்க்காவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கும் 22-ந் தேதி புல்லூர் பிர்க்கா, 23-ந் தேதி தொண்டி பிர்க்கா, 24 -ந்தேதி திருவாடானை பிர்க்கா வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை வருகிற 31.7.2021 வரை இ -சேவை மையங்கள் மூலமாக அளிக்கலாம்.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றும் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தெரிவித்துள்ளார்.

Next Story