வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை நர்சு கொரோனாவுக்கு பலி


வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை நர்சு கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 18 Jun 2021 10:29 PM IST (Updated: 18 Jun 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை நர்சு கொரோனாவுக்கு பலி

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முஷ்தரி பேகம் (வயது 55). வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு  உயிரிழந்தார். 

முஷ்தரி பேகத்தின் கணவர் இஸ்மாயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது 2 மகன்கள் உள்ளனர்.

Next Story