திருப்பூர் மாவட்டத்தில் 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில்  481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 18 Jun 2021 10:30 PM IST (Updated: 18 Jun 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 19 பேர் பலியாகியுள்ளனர்.
481 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை இவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
19 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 77 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 2,591 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 917 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 684 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story