கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்


கருப்பு சின்னம் அணிந்து  பணியாற்றிய டாக்டர்கள்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:57 PM IST (Updated: 18 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்

திருப்பூர்
டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் மருத்துவமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் சார்பில் நேற்று கருப்பு சின்னம் அணிந்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றினார்கள். திருப்பூர், பல்லடம், அவினாசி, பொங்கலூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதியில் 120-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். மருத்துவ சேவையை நிறுத்தாமல் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தனர்.
இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை தலைவர் குணசேகரன், செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்தும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் ‘மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மருத்துவமனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குபவர்களை விரைவாகவும், கடுமையாக தண்டிக்க வேண்டும். இதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Next Story