கொரோனா ஊரடங்கில் தளர்வு: நெல்லை மாநகர பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு


கொரோனா ஊரடங்கில் தளர்வு:  நெல்லை மாநகர பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 12:40 AM IST (Updated: 19 Jun 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை:

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைய தொடங்கியதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டன. மற்றபடி ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அனைத்து கடைகளும் திறந்திருந்தன. நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்றன. சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய அளவிற்கு வாகன போக்குவரத்து இருந்தது.
நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகில் கொக்கிரகுளம், நெல்லை பைபாஸ் சாலை, அம்பை ரோடு, நெல்லை வண்ணார்பேட்டை - முருகன்குறிச்சி ரோடு ஆகிய இடங்களில் உள்ள சிக்னல் பகுதிகளில் வாகனங்கள் தாறுமாறாக சென்றன.
நெல்லை மாநகர பகுதியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அதிகளவில் வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதில் அத்தியாவசிய பணிகளுக்கு சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இ-பதிவு இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story