பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
தோகைமலை
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிைம அடிப்படையில் முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக 44 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது இளம் தலைமுறையினருக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் அறிவுறுத்தலின்படி பாலூட்டும் தாய்மார்களுக்கு நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தோகைமலை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story