பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு: அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு:  அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 19 Jun 2021 12:47 AM IST (Updated: 19 Jun 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்கிறது.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்கிறது.

கூடுதல் நீர் திறப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 
143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137.10 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆயிரத்து 561 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 6 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.93 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் பாபநாசம் பகுதியில் 17 மில்லி மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகஸ்தியர் அருவி

இந்த நிலையில் நேற்று பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அங்குள்ள அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வதிக்கப்பட்டு உள்ளதால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story