மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று
அரசின் தீவிர நடவடிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ெதாற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தினமும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சிவகங்கை,

கொரோனா அதிகரிப்பு
மாவட்ட நிர்வாகமும் கொரோனா பாதிப்பு குறைய பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது. பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை கடைபிடித்தனர். இதன் விைளவுவாக மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
79 ஆக பாதிப்பு
பாதிப்பை காட்டிலும் குணம் அடைந்தவரின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் என 912 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினாலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அப்போது தான் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்க முடியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story