மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
Published on

ஜோலார்பேட்டை

வாணியம்பாடியை அடுத்த காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 40). இவர் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பெரியகம்மியம்பட்டு ரெயில்வே பாலம் அருகே புத்துக்கண் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன், தினகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com