இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் 3 மணி நேரம் மின் நிறுத்தம்; அதிகாரி தகவல்


இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் 3 மணி நேரம் மின் நிறுத்தம்; அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:29 AM IST (Updated: 19 Jun 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பாகலூர், கெம்பட்டி, ஜூஜூவாடி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சிப்காட் பேஸ் 2, நாரிகானபுரம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், தளி, கெலமங்கலம், ஓசூர், மின்நகர், பேரிகை, அஞ்செட்டி, மத்திகிரி, கல்லாவி, மத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி பழுதான மின் கம்பங்களை மாற்றுதல், சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுதல், உயர் திறன் கொண்ட கம்பிகளை மாற்றுதல், இலுவை கம்பியை சீரமைத்தல், தொய்வான கம்பிகளுக்கு இடையில் கம்பம் நடுதல் மற்றும் மின் மாற்றி சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story