நாமக்கல் மாவட்டத்தில் 22-ந் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 22-ந் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 22-ந் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 22-ந் தேதி பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும் 22-ந் தேதி 20 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 80, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

பரவலாக மழை

சிறப்பு வானிலையை பொருத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் 22-ந் தேதி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளை கழிச்சல் மற்றும் முட்டை அழற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் முட்டை அழற்சிக்கு காரணமான நுண்ணுயிர்களை தடுக்க கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினியை உபயோகப்படுத்த வேண்டும். மேலும் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

=========

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com