சேலம் மாவட்ட மதுப்பிரியர்களால் ‘களை’ கட்டும் உப்பிலியபுரம் டாஸ்மாக் கடைகள்


சேலம் மாவட்ட மதுப்பிரியர்களால் ‘களை’ கட்டும் உப்பிலியபுரம் டாஸ்மாக் கடைகள்
x
தினத்தந்தி 19 Jun 2021 6:26 AM IST (Updated: 19 Jun 2021 6:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட மதுப்பிரியர்களால் உப்பிலியபுரம் டாஸ்மாக் கடைகள் ‘களை’ கட்டுகிறது

உப்பிலியபுரம், 
ஊரடங்கு தளர்வு இல்லாத 11 மாவட்டங்களில்,சேலம் மாவட்டமும் அடங்கும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்மம்பட்டி, திருச்சி மாவட்ட எல்லையான உப்பிலியபுரம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்ட மதுப்பிரியர்கள் உப்பிலியபுரம், சோபனபுரம், வைரிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்து நீண்ட வரிசையில் கையில் பைகளுடன் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை வேளையில் திருவிழா கூட்டம் போல் மதுப்பிரியர்கள் அலைமோதுகிறார்கள். அத்துடன் இங்குள்ள கடைகளில் மதியமே மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story