சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆசை வார்த்தை கூறி...
திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த இவர், கடந்த மாதம் 24-ந் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் பல
இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த கவுதம் (வயது 19) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருநின்றவூரில் உள்ள பவானி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
போக்சோவில் கைது
மேலும் அவர் புதுச்சத்திரம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அங்கு தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து திருநின்றவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி நேற்று காலை கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story