மதுபாட்டில்களை பதுக்கிய தொழிலாளி கைது


மதுபாட்டில்களை பதுக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 7:44 PM IST (Updated: 19 Jun 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்களை பதுக்கிய தொழிலாளி கைது

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு-அளக்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து, தனது வீட்டுக்கு அருகில் பதுக்கி வைத்து உள்ளார். 

இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு நேற்று மதியம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டின் பின்புறம் 49 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story