

அச்சன்புதூர்:
கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் குப்பத்து ஓடை பகுதிகளில் தென்னை, வாழை, மா பயிரிடப்பட்டுள்ளது. இங்கு 2 குட்டிகளுடன் சுற்றித்திரிந்த யானைகள் கடந்த இரண்டு நாட்களாக வாழை, தென்னந்தோப்பில் புகுந்து ஏராளமான தென்னை, வாழை மரங்களை பிடுங்கி எறிந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி, இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சொக்கம்பட்டி பீட் வனத்துறை அதிகாரிகள் வனவர் முருகேசன் தலைமையில் அங்கேயே முகாமிட்டு யானைகளை வெடிவைத்து இரவு பகலாக விரட்டி வருவதாக கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.