கலெக்டர், ஆணையாளர் கூட்டாக ஆய்வு
கலெக்டர், ஆணையாளர் கூட்டாக ஆய்வு
கோவை
கோவை மாநகர பகுதியில் நடைபெற்ற மாஸ் கிளினிங் பணிகளை கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
தூய்மை பணி
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 72-வது வார்டு காளீஸ்வரா மில் பகுதியில் சாலையோர குப்பைகளை அப்புறப்படுத்தும் மாஸ் கிளினிங் பணிகள் நடைபெற்றது.
இதை கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள், தூய்மை பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், அவர்கள் உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர்.
சித்த மருத்துவ சிகிச்சை
முன்னதாக அவர்கள், 51-வது வார்டு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் களப்பணியாளர்களிடம், வீடுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் சீனிவாசபுரம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம், ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தார்.
சின்னவேடம்பட்டி
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 42 -வது வார்டில் நேற்று தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார அலுவலர் முருகா, மேற்பார்வையாளர் சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் சின்னவேடம்பட்டி ஆதி திராவிடர் காலனியில் குப்பைகள், கழிவுகள், சாக்கடை அடைப்புகள்ஆகியவற்றை சரி செய்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அந்த பகுதி முழுக்க மருந்து தெளித்தனர். வீதி மற்றும் சாக்கடையோரங்களில் பீளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.
Related Tags :
Next Story