3,30,598 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது


3,30,598 பேருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 19 Jun 2021 9:05 PM IST (Updated: 19 Jun 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

3,30,598 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

திருப்பூர், ஜூன்.20-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 84 பேரும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 13 லட்சத்து 87 ஆயிரத்து 436 பேரும் என மொத்தம் 22 லட்சத்து 20 ஆயிரத்து 570 பேர் உள்ளனர்.
இவர்களில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 லட்சத்து 42 ஆயிரத்து 323 பேர் முதல் தவணை செலுத்தி உள்ளனர். இரண்டாவது தவணையாக 36 ஆயிரத்து 838 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதுபோல் கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக 39 ஆயிரத்து 983 பேரும், 2-வது தவணையாக 11 ஆயிரத்து 454 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தத்தில் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி வரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 598 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இது வரை 14.8 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
இந்தநிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Next Story