முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2021 9:58 PM IST (Updated: 19 Jun 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராமேசுவரம், 
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா  பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். ராமேசுவரம் பகுதியில் நேற்று பொந்தம்புளி பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். 
அப்போது சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகள் சிகிச்சைக்கு வருவார்கள் என்றும் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது நகராட்சி ஆணையாளரிடம் ராமேசுவரம் பகுதியில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதை தொடர்ந்து கண்காணித்து கடுமை யாக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 
சிறப்பு சிகிச்சை
மேலும் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது உடன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், சுகாதார நிலைய மருத்துவர் ஆரோன், நகராட்சி ஆணையாளர் ராமர், தாசில்தார் மார்ட்டின், சமூக நல திட்ட தாசில்தார் அப்துல் ஜபார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story