262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரண உதவி
விழுப்புரம் மாவட்டத்தில் 262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், பிற பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு கோவில் பணியாளர்கள் 262 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்து 48 ஆயிரமும், 2,620 கிலோ அரிசியும், 15 விதமான மளிகை பொருட்களையும் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story