திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jun 2021 10:21 PM IST (Updated: 19 Jun 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. 
இந்த நிலையில் நேற்று மேலும் 172 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இதில், 45,594 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 555 பேர் உயிரிழந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மாதத்துக்கு பிறகு கொரோனாவுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story