தூத்துக்குடியில் 131 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 436 ஆக உள்ளது. நேற்று 309 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரை 51 ஆயிரத்து 165 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 1,906 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா காரணமாக 365 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story