இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 10:48 PM IST (Updated: 19 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் இவரது மனைவி சிவசக்தி(வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் சமீபகாலமாக அழகப்பன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் குடிக்க வேண்டாம் என எவ்வளோ கெஞ்சியும் குடிப்பழக்கத்தை அழகப்பன் கைவிடாததால் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் சிவசக்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story