கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 19 Jun 2021 11:06 PM IST (Updated: 19 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

கீரமங்கலம், ஜூன்.20-
குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மது எடுப்புத்திருவிழாவும், வாரந்தோறும் வழிபாடுகளும் நடத்தப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வாராந்திர பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல பூஜைகள் செய்ய அதே ஊரை சேர்ந்த பூசாரி வேலாயுதம் (வயது 62) என்பவர் கோவிலுக்கு வந்த போது கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கருவறை பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து அவர் கிராமத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து  கிராம மக்கள் வந்து பார்த்தபோது, சாமி கழுத்தில் கிடந்த தங்க தாலி, மணிகள், காசுகள், சங்கிலி உள்ளிட்ட சுமார் 4 பவுன் தங்க நகைளும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி வேலாயுதம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story