'ஹலோ சீனியர்ஸ்', லேடிஸ் பஸ்ட்' திட்டத்தின் மூலம் முதியோர், பெண்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெளியிட்டார்
மாவட்டத்தில் 'ஹலோ சீனியர்ஸ், ' 'லேடிஸ் பஸ்ட்' என்ற திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் பெண்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய வாட்ஸ்-அப் எண்ணை போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெளியிட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சக்தி கணேசன், முதியோர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக தனியாக தொலைபேசி எண் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி முதியோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க 'ஹலோ சீனியர்ஸ்' என்ற திட்டத்தின் மூலம் 8220009557 என்ற புதிய காவல் மொபைல் எண்ணை நேற்று போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
'ஹலோ சீனியர்ஸ்' புதிய திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வயதான முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டரீதியான புகார்களை இந்த எண்ணில் தெரிவித்தால், காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் வாட்ஸ்-அப்பிலும் புகார் தெரிவிக்கலாம்.
நடவடிக்கை
இதேபோல் கடலூர் மாவட்ட பெண்களின் நலன் காப்பதற்காக 'லேடிஸ் பஸ்ட்' திட்டத்தின் மூலமாக 8220006082 என்ற உதவி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டரீதியான புகார்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி தாமதமின்றி நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் பெண்கள் தங்கள் புகார் குறித்து வாட்ஸ்-அப்பிலும் பதிவு செய்யலாம். இந்த இரு திட்டங்களின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு காவல்துறை சார்பில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story