ஓ.எப்.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


ஓ.எப்.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 11:59 PM IST (Updated: 19 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

ஓஎப்டி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவெறும்பூர்,
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 34). மத்திய அரசு நிறுவனமான ஓ.எப்.டி.யில் பிட்டராக வேலை செய்து வந்த இவர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார். இந்த நிலையில், குமரேசன் தனது நண்பர் ஒருவருக்கு பணம் கொடுத்ததாகவும், அவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்துவிட்டதால் அந்த பணத்தை வசூல் செய்யமுடியவில்லை. இதனால் பெரும் நஷ்டம் அடைந்த குமரேசன் மனம் உடைந்து ஓ.எப்.டி பம்ப் ஹவுசில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story