கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை நண்பர் கைது
கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
நண்பர்கள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி அருகே உள்ள கம்பிளி கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி மகன் மகாதேவன் (வயது 26), புரோட்டா மாஸ்டர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகையா மகன் மகாதேவன் (23). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்கள் 2 பேரும் தனித்தனியாக அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
வெட்டிக்கொலை
இதற்கிடையே, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக புரோட்டா மாஸ்டர் மகாதேவனுக்கும், கட்டிட தொழிலாளி மகாதேவனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் மகாதேவன் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் தொழிலாளி மகாதேவன் புகுந்தார். அவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் புரோட்டா மாஸ்டர் மகாதேவனை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தொழிலாளி மகாதேவன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக ஆய்க்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட மகாதேவன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது-பரபரப்பு
இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கட்டிட தொழிலாளி மகாதேவனை கைது செய்தனர். அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story