கஞ்சா விற்ற 3 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
கஞ்சா விற்பனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆவேரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 3 பேர் சுமார் 600 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இதில் அவர்கள் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலச்சந்திரனின் மகன் பாரதிதாசன்(வயது 23), காமராசுவின் மகன் சின்ராசு(24), ஜெயங்கொண்டம் காமராஜர் நகரை சேர்ந்த செல்வேந்திரன் மகன் பிரபாசங்கர்(21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story