சிறந்த சமூக சேவகர்- சேவை நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிறந்த சமூக சேவகர்- சேவை நிறுவனங்களுக்கான முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
சிறந்த சமூக சேவகர்- சேவை நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூர்:

தமிழக முதல்-அமைச்சரால் 2021-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தகுதி வாய்ந்த சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களாக இருக்க வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 25-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-209296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com