நாமக்கல் மாவட்டத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,757 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,085 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று 421 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 266 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,450 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
======
Related Tags :
Next Story