புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jun 2021 4:01 PM IST (Updated: 20 Jun 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தற்போது 3,562 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 200 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,847 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 479 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மொத்தம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,562 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 3,562 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 More update

Next Story