சேதம் அடைந்த முடிகொண்டான் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேதம் அடைந்த முடிகொண்டான் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 5:25 PM IST (Updated: 20 Jun 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி அருகே சேதம் அடைந்த முடிக்கொண்டான் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரை தெருவில் முடிகொண்டான் ஆற்றில் தூர்வாரும் பணியின் போது கரைகள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்றது. இதனால் முடிகொண்டான் ஆற்றின் கரை சேதம் அடைந்து ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது அடிக்கடி வெள்ளப்பெருக்கின் போது உடைப்பு ஏற்படும் தாழ்வான பகுதியாகவும் உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து சேதம் அடைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் 2 முறை கரையில் உடைப்பு ஏற்பட்டு குடிசை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர்வதற்கு முன்னதாக சேதம் அடைந்த கரைகளை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story