ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2021 8:49 PM IST (Updated: 20 Jun 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் முருகன் கிளை செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், மாவட்ட தலைவர் குருசாமி, சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் காஜா நஜிமுதீன், அங்குதன், சித்திரவேல், ராமச்சந்திரன், தீனதயாளன், உதயகுமார் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story