மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
மூலனூர்:
மூலனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பால குமார் நகர் அருகே அமராவதி ஆற்றுப்படுகையில் நாகாத்தம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 கார் 1 வேன் ஆகியவற்றில் 150-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 2 மர்ம ஆசாமிகள் கடத்த முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மல்லம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38), தனபால் (50) என தெரியவந்தது. இந்த வழக்கில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்கள் மற்றும் 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story