முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்திலும் இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்திலும் இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முத்தூர்:
முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்திலும் இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் பவானிசாகர் அணையில் இருந்து எண்ணெய்வித்து பயிருக்கு தண்ணீர் திறக்கப்படாமல் குடிநீர் ஆதாரம் மேம்படுத்துவதற்கு உயிர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இருப்பினும் இப்பகுதி ஒருசில விவசாயிகள் தங்களது கிணற்று நீர் பாசனம் மூலம் குறைந்த அளவு நிலக்கடலை சாகுபடி செய்து பலன் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் அப்போது கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக தொடர்ந்து 5 மாதங்கள் இடைவிடாது தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டினர்.
கொரோனா வைரஸ் தாக்கம்
இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் எண்ணெய்வித்துப் பயிர் சாகுபடிக்கு திறந்து விடுவதற்கு ஏதுவாக இருந்ததால் கீழ்பவானி பாசன முறை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்படி இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் வயல்களில் சுமார் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
இதன்படி நிலக்கடலை சாகுபடிக்கு பார் கட்டுதல், உழவு பணி, விதைப்பு பணி, அடி உரம் இடுதல், மேல் உரம் இடுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, கலை எடுக்கும் பணிகள், அறுவடை பணிகள் என 1 ஏக்கருக்கு மொத்தம் சுமார் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர்.
கோடை வெயில்
இதன்படி தமிழக அரசு உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் 10ந் தேதி முதல் தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாகவே கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்திலும் விவசாய விளை நிலங்களில் கிணற்றுநீர் நிலக்கடலை செடிகளுக்கு பாய்ச்சப்படுவதால் ஓரளவு வெயிலை தாங்கி பச்சை, பசேல் என்று வளர்ந்துள்ளது.
இதனால் கிராமப் பகுதிகளில் தற்போது நிலக்கடலை செடிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலும் தப்பித்து வறட்சியைத் தாங்கி வளர்ந்துள்ளன. இதன்படி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்திலும் இப்பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story