நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை


நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 20 Jun 2021 10:13 PM IST (Updated: 20 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினமும் 2,700 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் முடிவு ஓரிரு நாட்களில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. 

தொற்று பரவலை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், கொரோனா உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

மக்கள் தொகை குறைவாக உள்ள மாவட்டத்தில் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக தொடர்ந்து இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story